Enable Javscript for better performance
புதுச்சேரியில் 41 வேட்பாளர்கள் மனு தாக்கல்- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 41 வேட்பாளர்கள் 48 வேட்பு மனுக்களை தாக்கல்

    செய்துள்ளனர்.

    புதுச்சேரி தொகுதியில் வாக்குப்பதிவு வரும் 24-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த மார்ச் 29-ம் தேதி தொடங்கியது. ஏற்கெனவே அதிமுக வேட்பாளர் வி.ஓமலிங்கம், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் வி.ரெங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.விசுவநாதன் உள்பட சுயேச்சைகள் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

    வேட்பு மனுத் தாக்கல் செய்ய இறுதி நாளான சனிக்கிழமை முக்கிய வேட்பாளர்களான காங்கிரஸ் சார்பில் வி.நாராயணசாமி, என்.ஆர். காங்கிரஸ் ஆர்.ராதாகிருஷ்ணன், திமுக சார்பில் எச்.நாஜிம், பாமக சார்பில் ஆர்.கே.அனந்தராமன் மற்றும் சுயேச்சைகள் மனுத் தாக்கல் செய்தனர்.

    மாலை 3 மணியோடு வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது. முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 41 பேர் 48 வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

    இந்த வேட்பு மனுக்கள் பரிசீலனை வரும் 7-ம் தேதி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் பொதுப் பார்வையாளர்கள், வேட்பாளர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற 9-ம் தேதி கடைசி நாளாகும்.

    தேர்தல் ஆணையத்தின் அனைத்துப் பார்வையாளர்களும் புதுச்சேரிக்கு வந்து தங்கள் பணியைத் தொடங்கி உள்ளனர்.

    அனைவரும் வேட்பு மனுக்கள் பரிசீலனையின் போது உடனிருப்பர் என புதுச்சேரி தலைமைத் தேர்தல் அலுவலர் டி.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai