சுடச்சுட

  

  மத்திய அமைச்சர் நாராயணசாமியின் சொத்து மதிப்பு ரூ.11.54 கோடி

  By புதுச்சேரி,  |   Published on : 06th April 2014 04:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளரும் மத்திய இணை அமைச்சருமான நாராயணசாமிக்கு ரூ. 11.54 கோடி சொத்து உள்ளதாக, வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மத்திய அமைச்சரும், காங்கிரஸ் வேட்பாளருமான நாராயணசாமி தனது வேட்பு மனுவோடு தாக்கல் செய்துள்ள சொத்து விவரம்:

  கடந்த 2012-13 ஆண்டில் வருவாய்த் துறையிடம் தனது வருவாய் ரூ.14,81,840 எனத் தெரிவித்துள்ளார். ரொக்கம் கையிருப்பு ரூ.40,000 ஆகும். வங்கிகள், நிதி நிறுவனங்களில் சேமிப்பு, சொகுசு கார், 150 கிராம் தங்கம் என்ற வகையில் நாராயணசாமி பெயரில் ரூ.73,10,715-ம், மறைந்த அவரது மனைவி கலைச்செல்வி பெயரில் ரூ.4.25 லட்சம் மதிப்புள்ள காரும், அசையாச் சொத்து ரூ. 28.25 லட்சத்துக்கு வாங்கி அதில் ரூ. 2.08 கோடிக்கு பணிகள் நடந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  நாராயணசாமி பெயரில் வாங்கிய சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 2.61 கோடியாகவும், அவரது பூர்வீக சொத்து மதிப்பு ரூ. 2.83 கோடியாகவும் உள்ளது. மறைந்த அவரது மனைவி கலைச்செல்வியின் பெயரில் ரூ. 2.96 கோடி சொத்து உள்ளது.

  மேலும் வங்கியில் நாராயணசாமி பெயரில் ரூ.42,06,223 கடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ. 11.54 கோடி.

  என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரின் சொத்து விவரம்: புதுச்சேரி எம்.பி. தொகுதி என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், வேட்பு மனுவோடு தாக்கல் செய்துள்ள சொத்து விவரம்:

  ரொக்கம் கையிருப்பு: ஆர்.ராதாகிருஷ்ணன்-ரூ.1,60,000, மனைவி சுபாஷினி-ரூ.25,000. கடந்த 2012-13-ல் வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்யப்பட்ட விவரத்தில் ரூ.12,38,550 வருவாய் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

  ராதாகிருஷணன் பெயரில் ரூ.2,00,45,004 மதிப்புள்ள அசையும் சொத்துகளும், மனைவி சுபாஷினி பெயரில் ரூ.28,05,000-மும், மகன்கள் நிதிஷ் கிருஷ்ணா, கோகுலகிருஷ்ணா பெயர்களில் தலா ரூ.1,04,000 மதிப்புள்ள அசையும் சொத்துகளும் உள்ளன.

  அசையாச் சொத்துக்கள்: வேட்பாளர் ராதாகிருஷ்ணன் பெயரில் ரூ,6,05,77,104 மதிப்புள்ள அசையாச் சொத்துகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

  பல்வேறு வங்கிகள், நிதி நிறுவனங்களில் தனக்கு ரூ.76,58,530 மதிப்புக்கு கடன்கள் உள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ. 8.36 கோடி.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai