சுடச்சுட

    

    மத்திய நிதிக்குழுவில் புதுவை சேர்க்கப்படாததற்கு யார் காரணம்

    By புதுச்சேரி  |   Published on : 06th April 2014 04:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய நிதிக்குழுவில் புதுவை மாநிலம் இடம் பெறாமைக்கு யார் காரணம் என அதிமுக மாநிலச் செயலர் ஆ.அன்பழகன் கேள்வி எழுப்பி உள்ளார்.

    புதுச்சேரி தொகுதி அதிமுக வேட்பாளர் ஓமலிங்கத்தை ஆதரித்து வில்லியனூர் பகுதியில் சனிக்கிழமை தேர்தல் பிரசாரம் நடைபெற்றது.

    தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று அன்பழகன் பேசியது:

    மத்திய அமைச்சர் நாராயணசாமி, முதல்வர் ரங்கசாமி இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு ஒரே மேடையில் விவாதம் நடத்த தயாரா என சவால் விடுகின்றனர்.

    இருவரின் சட்டவிரோதச் செயல்பாடுகள் குறித்து மக்களிடம் விளக்குவதே அதிமுக தான்.

    மத்திய நிதிக்குழுவில் புதுவை மாநிலம் இன்று சேர்க்கப்படவில்லை. இதற்கு யார் காரணம். மாநிலத்தில் நீண்ட காலமாக உள்ள கடன்களை ரத்து செய்ய இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. துறைமுக அபிவிருத்தித் திட்டம், சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்கள் தடை பட்டதற்கு யார் காரணம்.

    காங்கிரஸ் ஆட்சியின் போது புதை சாக்கடை திட்ட ஊழல், குப்பை வாரும் ஒப்பந்த ஊழல், இலவச அரிசி கொள்முதல் ஊழல் போன்றவை தொடர்பாக முதல்வர் ரங்கசாமி என்ன நடவடிக்கை எடுத்தார்.

    எனவே பொதுமக்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நடுநிலையோடு சிந்தித்து அதிமுக வேட்பாளர் ஓமலிங்கத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் அன்பழகன்.

    இந்நிகழ்ச்சியின் போது தொகுதி பொறுப்பாளர் எஸ்.செம்மலை, எம்எல்ஏக்கள் ஓம்சக்திசேகர், பி.புருஷோத்தமன், ஏ.பாஸ்கர், எல்.பெரியசாமி, வில்லியனூர் பொறுப்பாளர் எ.பாஸ்கர், நகர்ச் செயலர் ரவீந்திரன், தொகுதிச் செயலர் எஸ்.டி.சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai