சுடச்சுட

  

  மீன்பிடி தொழிலாளர்கள் இருவர் ஆற்றில் மூழ்கிச் சாவு

  By புதுச்சேரி,  |   Published on : 06th April 2014 04:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வில்லியனூர் அருகே ஆற்றில் மூழ்கி மீன் பிடி தொழிலாளிகள் 2 பேர் சனிக்கிழமை உயிரிழந்தனர்.

  விழுப்புரம் வட்டம், கோலியனூர் அருகே உள்ள சாலை அகரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஜெயராமன் (60). அதே பகுதியைச் சேர்ந்தவர் குப்பன் (57). மீன்பிடி தொழிலாளர்களான இவர்கள் வில்லியனூர் பகுதி சங்கராபரணி ஆற்றில் மீன்பிடித்து பிழைப்பு நடத்தி வந்தனர். வழக்கம்போல், வெள்ளிக்கிழமை மாலை வில்லியனூர் அருகே ஒதியம்பட்டு சங்கராபரணி ஆற்றில் வலை போட்டு மீன் பிடித்துள்ளனர்.

  அப்போது அவர்கள் சகதியில் சிக்கி மூழ்கியுள்ளதாகத் தெரிகிறது. ஆள் நடமாட்டமில்லாததால் வெளியே தெரியாமல் போனது. சிறிது நேரத்தில் அந்த வழியாக வந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில், வில்லியனூர் போலீஸார் அப்பகுதிக்குச் சென்று ஜெயராமனின் உடலைக் கைப்பற்றி விசாரித்தனர்.

  மேலும், வில்லியனூர் தீயணைப்புத் துறை அலுவலர்

  ரித்தோஷ்சந்திரா தலைமையிலான வீரர்கள் ஆற்றில் குப்பனின் உடலைத் தேடினர். இரவு நேரமானதால் தேடுதல் பணி கைவிடப்பட்டது.

  இந்நிலையில், சனிக்கிழமை காலை ஆற்றில் குப்பனின் உடல் மிதந்தது. வில்லியனுôர் போலீஸார் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வில்லியனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai