சுடச்சுட

    

    மேலூர் அருகே கார் விபத்து: புதுச்சேரி கல்லூரி மாணவர் சாவு

    By மேலூர்  |   Published on : 06th April 2014 04:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேலூர் அருகே நான்குவழிச் சாலை பாலத்தில் கார் மோதியதில், புதுச்சேரியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

    புதுச்சேரி கல்லூரி மாணவர்கள் ஒரு காரில் திருச்செந்தூருக்குச் சென்று கொண்டிருந்தனர். சனிக்கிழமை காலை, மேலூர்-மதுரை நான்குவழிச் சாலையில் வெள்ளரிப்பட்டி ஓடை பாலத்தில் கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், காரை ஓட்டிவந்த மாணவர் ஹேமசந்திரன் (22) உயிரிழந்தார். மேலும், 5 பேர் காயமடைந்தனர்.

    காயமடைந்த ராஜேஷ், புவனேஷ்வரன் ஆகியோர் மேலூர் அரசு மருத்துவமனையிலும் மற்றும் பிரபு, பாலா, சிவசங்கர் ஆகியோருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த விபத்து குறித்து, மேலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai