சுடச்சுட

  

  நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, புதுச்சேரியில் எம்.ஏ.ஜோதிமுருகன் என்ற இளைஞர் கடற்கரை காந்தி சிலை அருகே சனிக்கிழமை 12 மணி நேரம் ஒற்றைக் காலில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

  புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 24 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் நேர்மையான முறையில் வாக்களிக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் பல்வேறு தனியார் அமைப்புகள், தனி நபர்களும் ஈடுபட்டுள்ளனர்.

  அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர் ஜோதிமுருகன் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சனிக்கிழமை காலை 9 மணி முதல் ஒற்றைக் காலில் நின்றார். அவருக்கு தமிழ்ச் சங்கத் தலைவர் வி.முத்து, ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

  இவர் ஏற்கெனவே பயங்கரவாதத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஒற்றைக் காலில் நின்று சாதனை புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai