சுடச்சுட

    

    என்.ஆர். காங்கிரஸில் இணைந்தகூட்டுறவு சங்க முன்னாள் தலைவர்

    By காரைக்கால்  |   Published on : 07th April 2014 04:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்கால் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம், வீடு கட்டும் சங்க முன்னாள் தலைவர் ஆர்.பி. சரவணன், திமுகவில் இருந்து விலகி முதலமைச்சர் என். ரங்கசாமி முன்னிலையில் என்.ஆர். காங்கிரஸில் சனிக்கிழமை இணைந்தார்.

    காரைக்காலுக்கு சனிக்கிழமை வந்த புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமிக்கு சால்வை, மாலை அணிவித்து, ஆர்.பி. சரவணன் என்.ஆர். காங்கிரஸில் தம்மை இணைத்துக்கொண்டார்.

    திமுகவில் நீண்ட காலம் இருந்த இவர், கடந்த 1991 முதல் 1993-ம் ஆண்டு வரை காரைக்கால் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவராகவும், 2009 முதல் 2011-ம் ஆண்டு வரை காரைக்கால் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத் தலைவராகவும், காரைக்கால் கோயில்பத்து ஸ்ரீ பார்வதீஸ்வரர் கோயில் அறங்காவல் குழுத் தலைவராகவும் இருந்தவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai