சுடச்சுட

  

  வரும் ஏப்ரல் 21-ம் தேதி வரை புதுச்சேரி திமுக வேட்பாளர் எச்.நாஜிம் மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

  இது தொடர்பாக புதுச்சேரி திமுக தலைமைக் கழகம் சார்பில் வெளியிட்ட அறிக்கை: சனிக்கிழமை வேட்பு மனுவை தாக்கல் செய்த அவர் திங்கள்கிழமை காலாப்பட்டு, தட்டாஞ்சாவடிப் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். 8-ம் தேதி காமராஜர் நகர் தொகுதியில் பிரசாரம் செய்கிறார். மாலையில் திமுக பொதுச் செயலர் அன்பழகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் பிரசாரம் செய்கின்றனர்.9-ம் தேதி காரைக்காலிலும், 10-ம் தேதி காலை உழவர் கரையில் பிரசாரம் செய்கிறார். இரவு கருணாநிதி பங்கேற்கும் பொதுக் கூட்டம் நடக்கிறது. 11-ம் தேதி காலை ஊசுடு தொகுதியிலும், மாலை முத்தியால்பேட்டை, லாஸ்பேட்டை தொகுதியிலும், 12-ம் தேதி காலை மண்ணாடிப்பட்டு தொகுதியிலும், மாலை திமுக பொருளாளர் ஸ்டாலின் பிரசாரம் நடக்கிறது.

  13-ம் தேதி காலை வில்லியனூர், மங்கலம் தொகுதிகளிலும், மாலை நடிகர் வாகை சந்திரசேகர், ரகுமான்கான் பிரசாரம் நடக்கிறது.

  14-ம் தேதி ஏனாம் தொகுதியிலும், 15-ம் தேதி மாலை பாகூர் தொகுதியிலும், 16-ம் தேதி காலை ஏம்பலம் தொகுதியிலும், மாலை மணவெளி தொகுதியிலும், 17-ம் தேதி காரைக்காலிலும், 18-ம் தேதி காலை அரியாங்குப்பம் தொகுதியிலும், மாலை முதலியார்பேட்டை தொகுதியிலும், 19-ம் தேதி காலை திருபுவனை, நெட்டப்பாக்கம் தொகுதிகளிலும், மாலை கதிர்காமம், இந்திரா நகர் தொகுதிதியிலும், 20-ம் தேதி காலை உப்பளம், மாலை ராஜ்பவன் தொகுதியிலும், 21-ம் தேதி காலை உருளையன்பேட்டை தொகுதியிலும், மாலை நெல்லித்தோப்பு தொகுதியுடன் பிரசாரம் நிறைவடைகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai