சுடச்சுட

  

  புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவாக ஐஎன்டியூசி சார்பில் உழவர்கரை தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

  இப் பிரசாரத்துக்கு மாநிலத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் உழவர்கரை தொகுதிக்குள்பட்ட விக்டோரியா நகர், பாவாணர் நகர், பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.

  அவருடன் இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் சரவணன், வட்டார காங்கிரஸ் தலைவர் லட்சுமி மோகன், நிர்வாகிகள் செல்வராஜ், நந்தகுமார், பாலகிருஷ்ணன், செல்வி, சகாயராஜ் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai