சுடச்சுட

  

  காரைக்காலில் நடமாடும் மாதிரி வாக்குச் சாவடி

  By காரைக்கால்,  |   Published on : 07th April 2014 04:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காரைக்காலில் புதிய வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்கு முன்பு பழகுவதற்கு ஏதுவாக, நடமாடும் வாக்குச் சாவடி சேவையை மாவட்ட ஆட்சியர் சனிக்கிழமை தொடங்கிவைத்தார்.

  காரைக்கால் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அ. முத்தம்மா, மாதிரி வாக்குச் சாவடி வாகனத்தை சனிக்கிழமை இயக்கிவைத்தார்.

  இந்த மாதிரி வாக்குச் சாவடி வாகனத்தில் வாக்குச் சாவடி தலைமை அதிகாரி, வாக்குப் பதிவு அதிகாரி, பதிவேட்டை சரிபார்த்து கையெழுத்து பெறும் ஊழியர், விரலில் மை வைக்கும் ஊழியர் உள்ளனர். வாக்குப் பதிவுக்கான மின்னணு இயந்திரங்களும் வைக்கப்பட்டுள்ளன.

  புதிய வாக்காளர், வாக்குச் சாவடிக்குள் நுழைந்ததும் மேற்கொள்ளப்படும் பணிகளை இதன்மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த வாகனத்தோடு கூடுதலாக ஒரு வாகனத்தின் பின்புறம் வெண் திரை அமைக்கப்பட்டுள்ளது.

  இதில் வாக்குப் பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையிலான குறும்படம் ஒளிபரப்பப்படுகிறது.

  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறியது:

  இந்த வாகனம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள எல்லா கல்லூரிகள், நகரம், கிராமப்புறங்களுக்கும் செல்லும். வாக்குப்பதிவு முறை குறித்து பொது மக்கள் அறிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனம் பொது இடங்களிலும் நிறுத்தப்படுகிறது.

  இதன்மூலம் காரைக்காலில் 100 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெறும் என்று நம்புகிறோம் என்றார்.

  நிகழ்ச்சியில் காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சந்தனசாமி, திட்டத்துறை துணை இயக்குநர் சாந்தா வில்லியம்ஸ், தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai