சுடச்சுட

  

  சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக குற்றச்சாட்டு

  By புதுச்சேரி,  |   Published on : 07th April 2014 04:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு நிலை சீர்குலைந்து வருகிறது என திமுக புகார் கூறியுள்ளது.

  இது தொடர்பாக மாநில அமைப்பாளர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை: புதுவையில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மக்கள் நிம்மதியுடன் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

  பெண்களிடம் நகை பறிப்பு, ரெüடி கும்பல் வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு மிரட்டுவது, சிறையில் இருந்தபடியே ரவுடிகள் வியாபாரிகளை மிரட்டி பணம் பறிப்பது. பணம் தர மறுக்கும் தொழிலதிபர் குடும்பத்தினரை கடத்துகின்றனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது.

  இந்நிலையில் புதுச்சேரி ரெயின்போ நகரைச் சேர்ந்த நகை அடகு கடை அதிபர் ராதேஷ் ஷ்யாம்ஜி தூத் அவரது கடையிலேயே மர்ம நபர்கள் கொலை செய்து, பல லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்துள்ளனர். நகரின் மையப் பகுதியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த நேரத்தில் இக்கொலை நடந்துள்ளது.

  புதுவையில் இதுபோன்ற குற்றச் செயல்கள் நடக்கும் போதெல்லாம் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, உள்துறை அமைச்சகக் குழு வருகிறது என மிரட்டுவார். ஆனால் மத்திய குழு எதுவும் சட்டம் ஒழுங்கு தொடர்பாக உறுதியான நடவடிக்கை எடுத்ததில்லை. முதல்வர் ரங்கசாமியும் காவல்துறை அதிகாரிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தவில்லை.

  வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ரங்கசாமி, நாராயணசாமி இருவரையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார் சுப்பிரமணியன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai