சுடச்சுட

  

  "தேர்தல் நேர்மையாக நடைபெற அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்'

  By காரைக்கால்,  |   Published on : 07th April 2014 04:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேர்தல் நேர்மையாக நடைபெற தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அலுவலர்கள் அனைவரின் பங்களிப்பும் அவசியம் என்றார் காரைக்கால் மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் எம். அங்கமுத்து.

  காரைக்காலில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான அ. முத்தம்மா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  கூட்டத்தில் தேர்தல் பொது பார்வையாளர் அங்கமுத்து பேசியது:

  காரைக்கால் பகுதியில் தேர்தலில் கட்சியினர் பிரசார விளம்பரங்கள் ஓரிடத்திலும் இல்லை. இதன்மூலம் விதிகளை முறையாக கட்சியினர் கடைப்பிடிப்பதும், தேர்தல் துறை செயல்படும் விதமும் பாராட்டும்படி உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளோர் 24 மணி நேரமும், அவரவர்களுக்கான பணியை செம்மையாக செய்ய வேண்டும். நேர்மையாகவும், அமைதியாகவும் தேர்தல் நடக்க அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும். கடந்த தேர்தலைக் காட்டிலும் 10 சதவீதமாவது வாக்குப்பதிவு அதிகமாக இருக்க வேண்டும். காரைக்காலில் தேர்தல் விதிமீறல் தொடர்பான எந்த புகார் குறித்தும் தம்மிடம் தெரிவிக்கலாம் என்றார்.

  கூட்டத்தில் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் மோனிகா பரத்வாஜ், மாவட்ட கூடுதல் ஆட்சியர் எல். முகமது மன்சூர், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மாணிக்கதீபன், நாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai