சுடச்சுட

  

  "நலத் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும்'

  By புதுச்சேரி,  |   Published on : 07th April 2014 04:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேர்தலுக்குப் பின் என்.ஆர். காங்கிரஸ் அரசின் நலத் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என முதல்வர் என்.ரங்கசாமி கூறியுள்ளார்.

  ஏம்பலம் தொகுதிக்குள்பட்ட கரிக்கலாம்பாக்கத்தில் என்.ஆர். காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  இக் கூட்டத்துக்கு சுற்றுலா அமைச்சர் பெ.ராஜவேலு தலைமை வகித்தார். வேட்பாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

  இந்நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: நாடாளுமன்றத் தேர்தல் முடிவுற்றதும் அனைத்து நலத் திட்டங்களும் துரிதமாக நிறைவேற்றப்படும். புதுவை அரசு நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு தேவையான நிதியை வழங்கவில்லை. மாநில அரசுக்குத் தேவையான நிதியை ஒதுக்கவும், கடன் பெறவும் மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்.

  சிறிய மாநிலமான புதுவையில் எவ்வாறு வருவாயை பெருக்க முடியும். மத்திய அமைச்சர் நாராயணசாமி 23 ஆண்டுகள் எம்பியாக இருந்து மாநிலத்துக்கு என்ன நன்மை செய்தார்.

  மத்திய அரசு தேவையான நிதியைத் தராததால் மாநில அரசே நிதி ஆதாரத்தை பெருக்கத் திட்டமிட்டு நலத் திட்டங்களை செயல்படுத்த தொடங்கி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுற்றதும் அனைத்துத் திட்டங்களும் தடையின்றி நிறைவேற்றப்படும். வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வென்றால் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அனுமதி பெற்றுத் தருவார். எனவே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ராதாகிருஷ்ணனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் ரங்கசாமி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai