சுடச்சுட

  

  நாடாளுமன்ற ஜனநாயகம் குறித்த விநாடி} வினா போட்டி புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பகம், புதுச்சேரி தேர்தல் கண்காணிப்பகம் மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் மின் ஊடகவியல் துறை ஆகியவை இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி பல்கலைக்கழகம், ஆச்சாரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பவுடா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அண்ணாமலை பல்கலைக் கழகம் ஆகிய கல்லூரிகளிலிருந்து 3 உறுப்பினர்களைக் கொண்ட 9 அணிகள் கலந்து கொண்டன.

  இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்தியாவில் ஜனநாயகம், பஞ்சாயத்து ராஜ், நாடாளுமன்றம் மற்றும் அதன் செயல்பாடுகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது பொறுப்புகள், தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றன. முதல் மற்றும் இரண்டாவது இடத்தை புதுச்சேரி பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் பிடித்தனர்.

  சரத் பிரதீப், ஜனனி, பினேஷ் சந்த் ஆகியோரைக் கொண்ட அணி முதலிடத்தையும், விஷ்ணு, சுனைனா அகர்வால், சுபஜித் பால் ஆகியோரைக் கொண்ட அணி இரண்டாம் இடத்தையும் பெற்றனர். இவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

  பங்கேற்ற அனைத்து அணியினருக்கும் சான்றிதழ்களும், ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.

  பல்கலைக்கழக மின் ஊடகவியல் துறைத் தலைவர் அருள்செல்வன், பேராசிரியர் சமர்ஜித் கச்சாரி மற்றும் புதுச்சேரி தேர்தல் கண்காணிப்பக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜோசப் விக்டர் ராஜ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

  இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். தேர்தல் கண்காணிப்பக உறுப்பினர் மேரி வரவேற்றார்.

  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஹோப் தன்னார்வலர் ஃப்ளோரன் ஜெயராஜ் மற்றும் சமூகப் பணி மாணவர்கள் வினீத், திவ்யா ஆனந்த் ஆகியோர் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai