சுடச்சுட

  

  நாராயணசாமியும், ரங்கசாமியும் புதுச்சேரியை அருங்காட்சியகம் போல வைத்துள்ளனர்

  By புதுச்சேரி,  |   Published on : 07th April 2014 04:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி மாநிலத்தை ஒரு அருங்காட்சியகம் போல் முதல்வர் ரங்கசாமியும், மத்திய அமைச்சர் நாராயணசாமியும் வைத்துள்ளனர் என பாமக வேட்பாளர் ஆர்.கே.அனந்தராமன் கூறினார்.

  புதுவை முதலியார்பேட்டை தொகுதி பாமக செயல்வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்று அனந்தராமன் பேசியது:

  "தன்மானத்துக்காக புதுச்சேரி தொகுதியில் பாமக போட்டியிடுகிறது. எப்போது வேண்டுமானாலும் போட்டியில் இருந்து பாமக விலகி விடும்' என புரளி பரப்பி வருகின்றனர். ஆனால் பாமக ஒரு போதும் நாடாளுமன்றத் தேர்தல் போட்டியில் இருந்து விலகாது.

  புதுவை மாநிலத்தை 40 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிதான் ஆண்டு வருகிறது. நாராயணசாமி கடந்த 23 ஆண்டுகளாக எம்.பி.யாக உள்ளார். ஆனால் புதுவைக்கு அவர் செய்த நன்மைகள் என்ன?

  மாநில அரசுக்கு இடையூறு செய்தார். தேவையான நிதியை வரவிடாமல் தடுத்தார். 3 முறை தலைமைச் செயலாளரை மாற்றினார். 8 அரசுத் துறைகளில் சிபிஐ விசாரணைக்கு ஏற்பாடு செய்தார். இதுதான் நாராயணசாமி செய்த சாதனை.

  முதல்வர் ரங்கசாமியோ தேர்தல் வாக்குறுதி ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. இலவச மிக்ஸி, கிரைண்டர், டிவி தருகிறேன் என்றார்.

  ஒன்று கூட தரவில்லை. பாமகவினர் மீது காவல்துறை மூலம் வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவுகளின் கீழ் பொய் வழக்குகளை பதிவு செய்தார்.

  என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வெளிநாடுகளில் தொழில் செய்து வருகிறார். நமது நாட்டில் அவர் 3 மாதங்களே

  இருப்பார்.

  அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதார அமைச்சராக இருந்தபோது, 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டு வந்தார். ஜிப்மர் மருத்துவமனைக்கு தன்னாட்சி அதிகாரம் பெற்றுத்தந்தார் என்றார் அனந்தராமன்.

  கட்சி ஆலோசகர் கே.ஜி.ராமகிருஷ்ண கவுண்டர், வழக்குரைஞர் சுப்பிரமணி, நிர்வாகிகள் ரவி, குமார், மூர்த்தி, சுரேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai