சுடச்சுட

  

  பிரெஞ்சு இந்திய புதுச்சேரி மக்கள் நல இயக்க ஆலோசனைக் கூட்டம்

  By புதுச்சேரி,  |   Published on : 07th April 2014 04:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பிரெஞ்சு இந்திய புதுச்சேரி விடுதலைக் கால மக்கள் நல இயக்க ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  கூட்டத்துக்கு இயக்கத் தலைவர் டி.சிவராஜ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் எஸ்.வரதராஜுலு, வி.நடேசன், தீனதயாளு ரெட்டியார், உதயகுமாரி, வி.சங்கர், சதாசிவ ரெட்டியார், சீனு மணிவண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

  முத்தியால்பேட்டை வட்டார காங்கிரஸ் தலைவர் கலியபெருமாள், நிர்வாகிகள் பரமசிவம், டி.மாணிக்கராஜ் ஆகியோர் பேசினர். புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து தரக் கூடாது.

  இது தொடர்பாக வலியுறுத்தும் கட்சிகளுக்கு எதிராக பிரெஞ்சு இந்திய புதுச்சேரி மக்கள் நல இயக்கம் பிரசாரம் செய்யும்.

  தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தனி மாநில அந்தஸ்து பெற்றுத் தருவோம் எனக் கூறுவது புதுவை மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

  தனி மாநில அந்தஸ்து கோரிக்கை வைக்கும் கட்சிகளுக்கு எதிராகப் பிரசாரம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai