சுடச்சுட

  

  புதுச்சேரிக்கு தேர்தல் பொது பார்வையாளர் வருகை

  By புதுச்சேரி,  |   Published on : 07th April 2014 04:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் செüரப் பகத்  ஞாயிற்றுக்கிழமை புதுவைக்கு வந்து பல்வேறு நிகழ்ச்சிகள் பங்கேற்றார்.

  தேர்தல் பொதுப் பார்வையாளரான செüரப் பகத் புதுச்சேரி தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு நடைபெற்ற 2-ம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பினை மேற்பார்வையிட்டார்.

  இந்திய தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகள், பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அவர் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு விளக்கினார். பின்னர் அவர் கதிர்காமம் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளையும் பார்வையிட்டார்.

  மேலும் புதுவையில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள், விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai