சுடச்சுட

  

  மத்திய இணை அமைச்சர் வி. நாராயணசாமி புதுவைக்கு செய்தது என்ன என்று கேள்வி எழுப்பினார் புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி.

  காரைக்காலில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் பங்கேற்று அவர் மேலும் பேசியது:

  கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது காணப்பட்ட எழுச்சியை மக்களவைத் தேர்தலிலும் காண முடிகிறது. புதுவை வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை என்.ஆர். காங்கிரஸ் செயல்படுத்தி வருகிறது. ஆனால், அனைத்துக்கும் மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறது.

  நாராயணசாமி புதுவைக்கு ஒன்றுமே செய்யவில்லை. காரைக்காலில் ரயில் திட்டத்துக்கும், என்.ஐ.டி. அமைந்ததற்கும் அடித்தளமிட்டது நான்தான். மத்திய அரசுக்கு பல முறை கடிதம் எழுதினேன்.

  திட்டம் வருவதற்கு மாநில அரசு நிலம் அளித்து ஒத்துழைப்பு தந்தது.

  திட்ட தொடக்க நிகழ்ச்சியில் நான் பங்கேற்காத காரணத்தால், எல்லாவற்றையும் நான்தான் செய்தேன் என தம்பட்டம் அடிக்கிறார் நாராயணசாமி.

  பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு நாராயணசாமியும், புதுவை துணை நிலை ஆளுநரும் சேர்ந்து முட்டுக்கடை போடுவதையே வழக்கமாக கொண்டு செயல்பட்டனர். இதனால் மாநில வளர்ச்சி தடைபட்டது. காரைக்காலில் உள்ள அரசின் மின் உற்பத்தி நிலையத்தில் உற்பத்தியை அதிகரிக்க முயற்சி மேற்கொண்டோம். நாராயணசாமி அதை தடுத்துவிட்டார். அவருக்கு ஒத்துழைப்பு தராத உயரதிகாரிகளை ஆளுநரை பயன்படுத்தி மாற்றிவிடுவார்.

  மக்களின் நிலையை உயர்த்தவும், மாநில அரசுக்கு அதிகாரம் கிடைக்கவும், பாஜக கூட்டணியில் சேர்ந்துள்ளோம். மத்தியில் அமையும் அரசில் நாம் அங்கம் வகிக்க வேண்டும் என்றார் ரங்கசாமி.

  கூட்டத்தில் புதுச்சேரி அமைச்சர் மு.சந்திரகாசு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.எம்.சி. சிவக்குமார், பி.ஆர். சிவா, வாரியத் தலைவர்கள் கே. கோவிந்தராஜ், கே.ஆர். உதயக்குமார், பாஜக மாநில செயலரும் காரைக்கால் மாவட்ட பொறுப்பாளருமான எம். அருள்முருகன் உள்ளிட்டோர் பேசினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai