சுடச்சுட

  

  மீனவர்களுக்கு ரங்கசாமி பொய்யான வாக்குறுதி: ராமராஜன்

  By புதுச்சேரி,  |   Published on : 07th April 2014 04:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் மீனவர்களுக்கு வீடு கட்டித் தருவதாக முதல்வர் ரங்கசாமி பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளார் என நடிகர் ராமராஜன் கூறியுள்ளார்.

  அதிமுக வேட்பாளர் ஓமலிங்கத்தை ஆதரித்து உழவர்கரை தொகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியது:

  நாடாளுமன்றத் தேர்தலில் மக்களை ஏமாற்றும் விதமாக முதல்வர் ரங்கசாமியும், மத்திய அமைச்சர் நாராயணசாமியும் தாங்கள் செய்யாததை செய்ததாக கூறி பொய்ப் பிரசாரம் செய்து வருகின்றனர்.

  சுனாமி தாக்கி 8 ஆண்டுகள் ஆன நிலையில் இப்போது மீனவர்களுக்கு வீடு கட்டித் தருவேன் என முதல்வர் கூறியுள்ளார். அத்திட்டமே ரத்து செய்யப்பட்டு 2 ஆண்டுகள் ஆகி விட்டன.

  காங்கிரஸ் கட்சி எம்பியான கண்ணன் பிரசாரம் செய்ய முன்வரவில்லை. அவர் அதிமுகவுக்கு ஆதரவு தர வேண்டும். புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தருவதாக முதல்வர் ஜெயலலிதா உறுதி கூறி உள்ளார். எனவே வரும் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளை புறக்கணித்து அதிமுக வேட்பாளர் ஓமலிங்கத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் ராமராஜன்.

  இந்நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளர் எஸ்.செம்மலை எம்.பி., மாநிலச் செயலர் அன்பழகன், எம்எல்ஏக்கள் புருஷோத்தமன், ஆ.பாஸ்கர், நகர்ச் செயலர் ரவீந்திரன், தொகுதி செயலர் எ.பொன்னுசாமி உள்பட பலர் உடன் சென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai