சுடச்சுட

  

  வேட்பாளர்களுக்கு மனித உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்புக் கழகம் கோரிக்கை

  By புதுச்சேரி,  |   Published on : 07th April 2014 04:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வேட்பாளர்களுக்கு மனித உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்புக் கழகம் பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ளது.

  புதுச்சேரி மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக் கழக பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  இக் கூட்டத்துக்கு பொதுச் செயலர் இரா.முருகானந்தம் தலைமை வகித்தார். செயற்குழு நிர்வாகிகள், மாநில, மாவட்ட தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

  வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இயக்கத்தின் நிலைப்பாடு, நாடாளுமன்ற வேட்பாளர்களுக்கு மக்கள் சார்பில் இயக்கம் முன்வைக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  புதுவை மாநிலத்தில் தனிக் கணக்கு ஏற்படுத்தியதை திரும்பப் பெற்று, சுமத்தப்பட்டுள்ள பல கோடி கடன், வட்டித் தொகையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். யூனியன் பிரதேசத்துக்கான திட்டச் செலவுகளுக்காக ஒதுக்கும் மானிய நிதி 70 சதவீதமாக பெற்றுத் தர வேண்டும். ஜிப்மர் மருத்துவமனையில் நடைபெறும் முறைகேடுகள், குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மாநிலத்தில் உள்ள மனித உரிமைகள் குழுவை முழு அதிகாரம் பெற்ற மனித உரிமை ஆணையமாக மாற்ற வேண்டும்.

  மாநிலம் முழுவதும் உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் இலவசமாக கிடைக்கச் செய்ய வேண்டும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தொழிற்பேட்டைகளை ஏற்படுத்த வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு உறுதியான ஆதரவை தெரிவிக்க வேண்டும்.

  மேற்கண்ட கோரிக்கைகளை தங்கள் தேர்தல் அறிக்கையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்கள் இடம் பெறச் செய்ய வேண்டும்.

  இது குறித்து வேட்பாளர்கள் தாங்களே உறுதிமொழிப் பத்திரம் அளிக்க வேண்டும். மேற்கண்ட நடவடிக்கைகளை செய்ய முன்வரும் வேட்பாளர்களுக்கு எங்கள் இயக்கம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் வாக்களிப்போம். இல்லையெனறால் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற நோட்டா வாய்ப்பை பயன்படுத்த விழிப்புணர்வுப் பிரசாரம் செய்யப்படும் என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai