சுடச்சுட

  

  புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 41 பேர் சார்பில் 48 வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் வேட்புமனுக்கள் பரிசீலனை திங்கள்கிழமை நடைபெறுகிறது.

  புதுச்சேரி தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 29-ம் தேதி தொடங்கியது. சனிக்கிழமை (5.4.14) மனு தாக்கல் நிறைவடைந்தது. இதில் 41 பேர் 48 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதன் விவரம்:

  ஜி.பழனி (சிபிஐ எம்.எல்.), எம்.வி. ஓமலிங்கம் (அதிமுக)-2 மனுக்கள், மு.பாண்டுரங்கன் (அதிமுக மாற்று), க.சண்முகம் (சுயேச்சை), வி.ரங்கராஜன் (ஆம் ஆத்மி), மு.ராமதாஸ் (சுயேச்சை), சி.கிருஷ்ணமூர்த்தி (பி.எஸ்.பி.).

  ஆர்.விஸ்வநாதன் (சிபிஐ)-4 மனுக்கள், எஸ்.சஞ்சீவ்காந்தி (சுயேச்சை), கே.மஞ்சினி (சுயேச்சை), ஐ.செந்தில்குமார் (சுயேச்சை), எம்.சிட்டிபாபு (சுயேச்சை), ச.எழிலரசன் (சுயேச்சை).

  கா.ராமதாஸ் (சுயேச்சை), தனராசு (என்ற) மதிமகாராசா (சுயேச்சை), ப.பாக்கியராஜ் (சுயேச்சை), வி.ராமமூர்த்தி (சுயேச்சை), ஜி.கெüரிசங்கர் (சுயேச்சை), ஆர்.ராதாகிருஷ்ணன் (என்.ஆர்.காங்கிரஸ்), சு.சுதர்சனன் (சுயேச்சை), வே.நாராயணசாமி (காங்கிரஸ்)-4 மனுக்கள், ஆர்.செந்தில்குமார் (என்.ஆர். காங்கிரஸ் மாற்று), ஆர்கே.ஆர். அனந்தராமன் (பா.ம.க), ஆர்.ஜெயராமன் (பா.ம.க. மாற்று).

  ப.அசரவேல் (சுயேச்சை), ஏஎம்எச்.நாஜிம் (திமுக), எம்.அருமைச்செல்வம் (சுயேச்சை), ம.மரிஉத்திரிநாதன் (சமதா கட்சி), ச.சித்ரகலா (ஐக்கிய ஜனதாதளம்), கு.கலியமூர்த்தி (சுயேச்சை), பொன். தனசேகரன் (சுயேச்சை), ஆர்.வளவன் (சுயேச்சை), ஜெ.தண்டபாணி (சுயேச்சை), வி.விஜயா (சுயேச்சை), பெம்மாடி துர்கா பிரசாத் (சுயேச்சை), பி.ராதாகிருஷ்ணன் (சுயேச்சை), செல்வராஜ் (சுயேச்சை), ஜி.முருகன் (சுயேச்சை), புவல்லா நாகேஷ்வரராவ் (சுயேச்சை), கோ.சுதா (சுயேச்சை), தங்க. தேவதாஸ் (சுயேச்சை).

  இன்று மனுக்கள் பரிசீலனை: வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் தீபக்குமார், பொதுப் பார்வையாளர் செüரப்பகத் ஆகியோரால் மேற்கொள்ளப்படும். மனுக்களை திரும்பப் பெறுவதற்கான இறுதி நாள் 9.4.14

  ஆகும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai