சுடச்சுட

  

  மத்திய அமைச்சரும், காங்கிரஸ் வேட்பாளருமான வி.நாராயணசாமி வரும் 11ஆம் தேதி கேரளத்தை ஒட்டியுள்ள மாஹே பிராந்தியத்தில் பிரசாரம் செய்கிறார்.

  காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் நாராயணசாமி சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் காலாப்பட்டில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். அதன்பின் முத்தியால்பேட்டையில் திறந்த ஜீப்பில் சென்று பிரசாரம் செய்தார்.

  ஞாயிற்றுக்கிழமை அரியாங்குப்பம், மணவெளி தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

  இதையடுத்து, திங்கள்கிழமை நெல்லித்தோப்பு, மாலையில் உழவர் கரையிலும், 8ஆம் தேதி காலை பாகூர் தொகுதி, மாலையில் ஏம்பலம் தொகுதியிலும் பிரசாரம் செய்கிறார்.

  9ஆம் தேதி காலை திருபுவனையிலும், மாலை மண்ணாடிப்பட்டு தொகுதியிலும், 10ஆம் தேதி காலை நெட்டப்பாக்கத்தில் பிரசாரம் செய்கிறார்.

  மாலை மாஹே பிராந்தியத்தில் பிரசாரம் செய்ய புறப்பட்டுச் செல்கிறார். 11ஆம் தேதி காலை, மாலை இரு வேளைகளும் மாஹேயில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிக்கிறார்.

  இரவு புதுவை திரும்பும் அவர், 12ஆம் தேதி காலை உப்பளத்திலும், உருளையன்பேட்டையிலும், 13ஆம் தேதி காலை ஊசுடு தொகுதியிலும், மாலை மங்கலம் தொகுதியிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai