சுடச்சுட

  

  புதுவையில் இலவச அரிசி தொடர்ந்து வழங்கப்படுமா? என அதிமுக மாநிலச் செயலாளர் ஆ.அன்பழகன் கேள்வி எழுப்பி உள்ளார்.

  மணவெளி தொகுதியில் தேர்தல் பணிக்குழு அலுவலகத் திறப்பு விழா தவளக்குப்பத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. தொகுதி செயலர் மூர்த்தி தலைமை வகித்தார். இதில் மாநிலச் செயலர் அன்பழகன் பேசியது: கடந்த 3 ஆண்டு கால ஆட்சியில் இலவச அரிசி வழங்காத முதல்வர் ரங்கசாமி தற்போது நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இலவச அரிசி வழங்கினார். ஆனால் நடப்பு மாதம் பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்கவில்லை. இதனால் தொடர்ந்து இலவச அரிசி வழங்கப்படுமா என மக்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.

  மஞ்சள் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட இலவச கைலி, சேலையையும் நிறுத்தி விட்டார். இதற்கு நிதி இல்லை எனக் காரணம் கூறி வருகின்றனர். ஆனால் 18 வாரியங்களுக்கு தலைவர்களை நியமித்து அரசு நிதியை முதல்வர் வீணடிக்கிறார். 2 லட்சம் பேருக்கு வழங்கப்பட்ட இலவச துணி 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது. நாராயணசாமியும், ரங்கசாமியும் புதுவை மாநிலத்தை சீரழித்து விட்டனர். எனவே வரும் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஓமலிங்கத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் அன்பழகன்.

  இந்நிகழ்ச்சியில், அதிமுக வேட்பாளர் ஓமலிங்கம், எல்.பெரியசாமி எம்எல்ஏ உள்பட பலர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai