சுடச்சுட

    

    எனது சாதனைகளை கொச்சைப்படுத்துகிறார் ரங்கசாமி

    By புதுச்சேரி  |   Published on : 08th April 2014 03:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எனது சாதனைகளை முதல்வர் ரங்கசாமி கொச்சைப்படுத்திப் பேசி வருகிறார் என மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

    புதுச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி அரியாங்குப்பம், மணவெளி பகுதிகளில் திங்கள்கிழமை பிரசாரம் செய்தார். திறந்த ஜீப்பில் வீதி, வீதியாகச் சென்று வாக்கு சேகரித்து அவர் பேசியது:

    கடந்த 5 ஆண்டுகளாக நான் செய்த சாதனைகளை பட்டியலாகத் தயாரித்து, அதற்கு ஆதாரமாக படங்களை இணைத்து வெளியிட்டுள்ளேன்.

    இதைப் போல் முதல்வர் ரங்கசாமி தனது ஆட்சியில் என்ன செய்தார் என பட்டியல் வெளியிடத் தயாரா எனக் கேட்டேன். மேலும் ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா என்றும் கேட்டேன். ஆனால் அவரோ நான் ஒன்றும் செய்யவில்லை என்று மட்டும் கூறி வருகிறார்.

    மேலும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவந்த திட்டங்களை அவர் கொண்டுவந்ததாக சொல்லி வருகிறார். நான் செய்த பணிகளை முதல்வர் ரங்கசாமி கொச்சைப்படுத்தி வருகிறார். ஆனால் புதுச்சேரி மக்களுக்கு யார் யார் எப்படிப்பட்டவர்கள் என்பது நன்றாகவே

    தெரியும் என்றார் நாராயணசாமி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai