சுடச்சுட

    

    திருநள்ளாறில் என்.ஆர்.காங்கிரஸ், பாமக கட்சியினரிடையே திங்கள்கிழமை ஏற்பட்ட மோதலில் 9 பேர் காயமடைந்தனர்.

    திருநள்ளாறு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை என்.ஆர்.காங்கிரûஸ சேர்ந்த நவமணி என்பவருக்கும் பாமகவை சேர்ந்த புருஷோத்தமன் என்பவருக்கும் அரசியல் ரீதியாக தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை சுரக்குடி கிராமத்தில் ஒரு இறப்பு ஊர்வலத்தில் இருதரப்பினரும் கலந்து கொண்டபோது மீண்டும் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் இருதரப்பினரையும் சமாதானம் செய்துவைத்தனர்.

    மயானத்துக்கு சென்று திரும்பிய பிறகு அவர்களிடையே அடிதடி ஏற்பட்டுள்ளது. இதில் நவமணி, அவரது அண்ணன் ஆனந்தன், தம்பி நடேசன், தாயார் பார்வதி ஆகியோரும், பாமகவை சேர்ந்த புருஷோத்தமன், செந்தில், பாலசுப்ரமணியன், சுரேஷ், ராமன் ஆகிய 9 பேரும் காயமடைந்தனர். அவர்கள் காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாமகவினரை பார்க்க அக்கட்சியின் மாவட்டச் செயலர் க. தேவமணி மருத்துவமனைக்கு வந்தபோது, என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீஸார் தலையிட்டு சமரசம் செய்து வைத்தனர்.

    இதுதொடர்பாக இருதரப்பினரும் தனித்தனியே அளித்த புகாரின் பேரில் திருநள்ளாறு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai