சுடச்சுட

  

  "கால்நடை மருத்துவரின் ஒப்புதலுக்கு பிறகே ஆடுகளை வெட்ட வேண்டும்

  By 'காரைக்கால்  |   Published on : 08th April 2014 04:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கால்நடை மருத்துவர் சான்றளித்த பிறகே ஆடுகளை வெட்ட வேண்டும் என இறைச்சி வியாபாரிகளுக்கு பஞ்சாயத்து நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

  கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஆணையர் ஜெ.ஜெ. அரேலியஸ் தலைமையில் கோட்டுச்சேரி வட்டாரத்துக்குள் இறைச்சிக் கடை நடத்தி வருவோர் பங்கேற்ற கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

  கூட்டத்தில் ஆணையர் பேசியது: சாலையோரங்களில் உணவுக்காக ஆடுகளை வெட்டவோ, விற்பனை செய்யவோ கூடாது என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சுகாதாரமான, கால்நடை மருத்துவரின் ஆய்வுக்குள்படுத்தப்பட்டு சான்றளிக்கப்பட்ட ஆடுகளின் இறைச்சிகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

  இதற்காக ஆடுகளை காரைக்கால் நகராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமான ஆடு வெட்டும் கூடத்துக்கு கொண்டு சென்று உரிய பரிசோதனை செய்த பிறகே வெட்டி விற்பனைக்கு கொண்டு வரவேண்டும். இந்த அறிவுறுத்தலை மீறுவோர் மீது மிருகவதை தடுப்பு சட்டத்தின்படி பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்றார் ஆணையர்.

  கூட்டத்தில் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலக வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வன், கிராம நிர்வாக அதிகாரி தமிழரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai