சுடச்சுட

  

  ஜெயவீரபால ஆஞ்சநேயர் கோயிலில் நாளை குடமுழுக்கு

  By காரைக்கால்  |   Published on : 08th April 2014 04:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காரைக்காலில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ ஜெயவீரபால ஆஞ்சநேயர் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை (ஏப்.9) நடைபெறுகிறது. இதற்கான 4 கால யாகசாலை பூஜை திங்கள்கிழமை தொடங்கியது.

  காரைக்கால் தோமாஸ் அருள் வீதி, காமராஜர் வீதி சந்திப்பில் மிகச் சிறிய அளவிலான ஸ்ரீ ஜெயவீரபால ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இடநெருக்கடியின் காரணமாக, இக்கோயிலுக்கு அருகே புதிதாக ஆஞ்சநேயர் கோயில் கட்டப்பட்டது. இக்கோயில் குடமுழுக்கு புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

  குடமுழுக்கு விழாவையொட்டி, 4 கால யாகசாலை பூஜையாக திங்கள்கிழமை முதல் கால பூஜை, பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை காலை, மாலை 2, 3-ம் கால பூஜையும், புதன்கிழமை காலை 4-ம் கால பூஜையும் நடத்தப்பட்டு கடம் புறப்பாடு செய்யப்படுகிறது. இதைத் தொடர்ந்து குடமுழுக்கு நடைபெறவுள்ளது.

  குடமுழுக்கு ஏற்பாடுகளை அறங்காவல் குழுவின் தலைவர் ராம. வெற்றிச்செல்வன், செயலர் ஆர். கோவிந்தராஜ், பொருளாளர் த. பக்கிரிசாமி உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai