சுடச்சுட

    

    தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் மத்திய போலீஸ் படை சோதனை

    By புதுச்சேரி,  |   Published on : 08th April 2014 03:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் மத்திய ஆயுதப் போலீஸ் படையினர் திங்கள்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    மக்களவைத் தேர்தலையொட்டி முறைகேடுகளை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக கடல் வழியிலும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் துறை சார்பில் ஏற்கெனவே 36 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு, சோதனைச் சாவடிகளும் நிறுவப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மார்ச் மாதம் இறுதியில் தேர்தல் துறையினர் தேங்காய்த் திட்டு துறைமுகத்தில் சோதனை செய்தனர். கடலுக்குள் சென்று மீன்பிடி படகுகளில் சோதனை செய்தனர்.

    இந்நிலையில், அதன் தொடர்ச்சியாக கடலோர காவல்படையினரும் ரோந்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    தற்போது புதுவை வந்துள்ள மத்திய ஆயுதப் போலீஸ் படையினர் திங்கள்கிழமை தேங்காய்த்திட்டு துறைமுகத்துக்கு சென்றனர். அங்கு விசைப்படகுகளை முழு சோதனையிட்டனர். விசைப்படகிலுள்ள மீன் பெட்டிகள், அறைகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து விசைப்படகுகளை சோதனையிடுவோம். இது தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கை என மத்திய போலீஸ் படையினர் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai