சுடச்சுட

    

    தேர்தலைப் புறக்கணிக்க சுனாமி குடியிருப்பு மக்கள் முடிவு

    By காரைக்கால்  |   Published on : 08th April 2014 04:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்கால் அருகே அக்கரைவட்டம் சுனாமி குடியிருப்புப் பகுதியில் 10 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் செய்து தராததைக் கண்டித்து, தேர்தலை புறக்கணிக்க அப்பகுதியினர் முடிவு செய்துள்ளனர்.

    நிரவி திருப்பட்டினம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அக்கரைவட்டம் கிராமத்தில் உள்ள சுனாமி குடியிருப்பு பகுதியில் 97 வீடுகள் உள்ளன.

    ""இந்தப் பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. உரிய பராமரிப்பில்லை. இக்குடியிருப்புக்கு பட்டா தராததால் பல்வேறு வசதிகளை செய்துகொள்ள முடியாத நிலை உள்ளது. சுனாமி குடியிருப்பு கட்டப்பட்டு 10 ஆண்டுகளாகியும் புதுச்சேரி அரசு எதையுமே செய்ய முன்வரவில்லை. பலரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதை கண்டித்து மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்'' என இந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai