சுடச்சுட

  

  கவிஞர் கண்ணதாசன் 10ஆம் ஆண்டு

  விழா வரும் 26ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடக்கிறது.

  இதுதொடர்பாக புதுச்சேரி பன்னிரு திருமுறை மன்றத் தலைவர் வயி.நாராயணசாமி வெளியிட்ட அறிக்கை: பிரான்ûஸச் சேர்ந்த சிவப்பிரகாசம் தொடர்ந்து கவிஞர் கண்ணதாசன் விழாவை நடத்தி வருகிறார்.

  அதன்படி ஏப்ரல் 26-ல் 10ஆம் ஆண்டு விழா நடைபெறுகிறது. புதுச்சேரி பன்னிரு திருமுறை மன்றத் தலைவர் நாராயணசாமி, கவிஞர் கண்ணதாசனின் இரண்டாவது மகன் இயக்குநர் அண்ணாதுரை கண்ணதாசன் ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக அழைத்துள்ளனர்.

  "கவிஞர் கண்ணதாசனின் பாடல்கள்' என்ற தலைப்பில் இயக்குநர் அண்ணாதுரையும், "கண்ணதாசனும் கடவுள் பற்றும் என்ற தலைப்பில் நானும் உரையாற்றுகிறோம்.

  இவ்விழாவைத் தொடர்ந்து மே மாதம் 1ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை சுவிஸ் நாட்டில் உள்ள ஜூரிச் நகரில் பன்னாட்டு முருகபக்தி 2-வது மாநாடு நடக்கிறது.

  இதில் நீதிபதி சேது முருகபூபதி, புதுவை பல்கலைக்கழக பேராசிரியர் அறிவுநம்பி, எ.மு.ராஜன், லி.தியாகராஜன், சாம்ராஜ் உள்பட 12 திருமுறை மன்ற வாழ்நாள் உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai