சுடச்சுட

    

    "புதுவையின் வளர்ச்சியில் நாராயணசாமியின் பங்களிப்பு அதிகம்'

    By காரைக்கால்  |   Published on : 08th April 2014 03:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை மாநிலத்தின் வளர்ச்சிக்கு நாராயணசாமி ஏராளமான பணிகளை செய்துள்ளார் என்றார் புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன்.

    புதுவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவாக காரைக்கால் தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதியில் திங்கள்கிழமை ஏ.வி. சுப்ரமணியன் வாக்கு சேகரித்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

    மத்திய இணை அமைச்சர் வி. நாராயணசாமி கடந்த 5 ஆண்டுகளில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, யேனாம் பிராந்தியத்தில் செய்துள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்து பட்டியல் வெளியிட்டுள்ளார். இதை ஏற்றுக்கொள்ள முடியாத புதுச்சேரி முதல்வர், நாராயணசாமி புதுவைக்கு எதுவுமே செய்யவில்லையென பொய் பிரசாரம் செய்து வருகிறார்.

    ரயில் வசதி, புதுவைக்கான மத்திய நிதியை கூடுதலாக பெற்றுத் தந்தது, என்.ஐ.டி. உள்ளிட்ட உயர்கல்வி நிலையங்கள் புதுவைக்கு கொண்டு வந்தது, ஆறு பாலங்கள் கட்ட நிதி பெற்றுத் தந்தது, தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாக அனைத்து பிராந்தியங்களுக்கும் தந்தது உள்ளிட்ட பல்வேறு பணிகளை புதுவைக்காக நாராயணசாமி செய்துள்ளார்.

    ஆனால், மாநில முதல்வர் என்ற வகையில் ரங்கசாமி மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. அரிசிகூட மக்களுக்கு முறையாக தரப்படவில்லை. ரூ. 1 லட்சத்தில் வீடு கட்டும் திட்டத்துக்கான முதல் தவணைத் தொகை மட்டுமே தரப்பட்டுள்ளது. இதுபோன்று மாநிலத்தில் பெரும்பாலான பகுதியில் அடிப்படை வசதிகள் மேம்படத்தப்படவில்லை. தேர்தலில் நாராயணசாமி வெற்றி அடைவது உறுதி என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai