சுடச்சுட

  

  மணக்குளவிநாயகர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம்

  By புதுச்சேரி,  |   Published on : 08th April 2014 04:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேசிய அளவிலான போட்டியில் புதுச்சேரி மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

  டிசிஎஸ் நிறுவனம் சார்பில் தேசிய அளவிலான மோபிவிஸ் போட்டி கடந்த 3ஆம் தேதி நடைபெற்றது. இதில் பல்வேறு கல்லூரிகள், தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த 50 ஆயிரம் மாணவ, மாணவியர் 10 ஆயிரம் குழுக்களாக பதிவு செய்தனர்.

  முதல் சுற்று விநாடி-வினா பிப்ரவரி 5ஆம் தேதி இணையதளத்தில் நடந்தது. இதில் 51 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு இரண்டாம் சுற்றுக்குத் தேர்வு பெற்றது.

  இதில் மணக்குள விநாயகர் கல்லூரி மாணவர்கள் தங்கள் படைப்புத் திறனுக்கான டப்பாவாலா, வங்கி பாதுகாப்புக்கான மொபைல் பயன்பாட்டு ஆய்வை சமர்ப்பித்தனர்.

  அடுத்த சுற்றுக்கு 12 குழுக்கள் தேர்வு பெற்றன. அதில் மணக்குள விநாயகர் கல்லூரியைச் சேர்ந்த 2 குழுக்களும் அடங்கும். தங்கள் படைப்புத் திட்டம் குறித்து டிசிஎஸ் அதிகாரிகளிடம் எடுத்துரைத்தனர்.

  இதில் மணக்குள விநாயகர் கல்லூரி மூன்றாம் ஆண்டு ஐடி பிரிவு மாணவர்கள் விஜய் வெங்கட்ராமன், நாராயணன் சுந்தரேசன், முதல் பரிசையும், ஹரீஷ்சேகர், தரணிபாலு மூன்றாம் பரிசையும் பெற்றனர்.

  அம்மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு, வேலைக்கான ஆணை, இன்டன்ஷிப் வாய்ப்பையும் டிசிஎஸ் நிறுவனம் அளித்தது. வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரித் தலைவர் எம்.தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாறன், கல்லூரி முதல்வர் வெங்கடாசலபதி மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai