சுடச்சுட

  

  மத்திய அரசின் நெருக்கடியால்தான் புதுவையில் வாட் வரியை விதிக்க நேரிட்டது என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

  புதுவை காமராஜர் நகர் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. பொதுச் செயலாளர் வி.பாலன், வேட்பாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். தொகுதி பொறுப்பாளர்கள் மதி சுகுமாறன், பாஜக ரவீந்திரன் வரவேற்றனர். இதில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்றுப் பேசியது:

  என்.ஆர். காங்கிரஸ் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நாட்டிலேயே எங்கும் இல்லாத வகையில் சென்டாக் கல்வி ஊக்கத்தொகை, முதியோர் ஓய்வூதியம், காமராஜர் கல்வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

  இவற்றால் மாநில அரசுக்கு நல்லப் பெயர் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக மத்திய அமைச்சர் நாராயணசாமி பல்வேறு தடைகளை ஏற்படுத்தினார். மத்திய அரசு நிதி கிடைக்காமல் செய்தார். பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி பெற முடியாமல் செய்தார்.

  பிரதமர் அலுவலக இணை அமைச்சர் என்ற பொறுப்பில் இருந்த அவரால் ஒரே நாளில் ஏஎப்ஃடி ஆலை நவீனப்படுத்த நிதியை வாங்கித் தந்திருக்க முடியும். பட்டானூர் நிலத்தையும் விற்க ஏற்பாடு செய்திருக்கலாம்.

  ஆனால் எதையும் செய்யாமல் மாநில அரசை குறை கூறி வருகிறார்.

  வாட் வரி விதிப்பு: மத்திய அரசின் நெருக்கடியால்தான் புதுவையில் வாட் வரி விதிக்கப்பட்டது. எந்த சலுகையும் தர முடியாததால் தொழிற்சாலைகள் புதுவையை விட்டு வெளியேறின. வரிச்சலுகை தருமாறு மத்திய அமைச்சர்களே கேட்டும் பலனில்லை.

  சிறப்புப் பொருளாதார மண்டலம், துறைமுக மேம்பாட்டுத் திட்டத்தை தடுத்தவர் நாராயணசாமி. ஆனால் அவரோ ரங்கசாமி மிக்ஸி, கிரைண்டர் தரவில்லை என பிரசாரம் செய்கிறார். வரும் சட்டப்பேரவை தேர்தலுக்குள் அவற்றை வழங்கி விடுவோம் என்றார்

  ரங்கசாமி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai