சுடச்சுட

    

    மீனவர்களுக்கு தனித் துறை: திமுக வேட்பாளர் உறுதி

    By புதுச்சேரி,  |   Published on : 08th April 2014 03:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்தியில் மீனவர்கள் நலனுக்கு என தனியாக மீனவர் நலத் துறை ஏற்படுத்தப்படும் என திமுக வேட்பாளர் எச்.நாஜிம் வாக்குறுதி அளித்துள்ளார்.

    புதுவையை அடுத்த காலாப்பட்டு கனகசெட்டிக்குளத்தில் திமுக தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. காலாப்பட்டு, சின்னகாலாப்பட்டு, பிள்ளைச்சாவடி உள்பட பல்வேறு மீனவ கிராமங்களில் நாஜிம் வாக்கு சேகரித்துப் பேசியது:

    காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் கட்சிகளுக்கு வாக்களித்து மக்கள் ஏமாற்றம் அடைந்து விட்டனர். எந்த நலத்திட்டங்களையும் அவர்கள் செயல்படுத்தவில்லை. திமுக தலைவர் கருணாநிதி மீனவர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.

    திமுக வெற்றி பெற்றால் புதுவையிலும் பல்வேறு திட்டங்களை கொண்டு வர முடியும். மீனவர்களுக்கு என தனியாக மீனவர் நலத் துறை ஏற்படுத்தப்படும். புதுவையில் மாணவர்கள் கல்விக் கடனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் நாஜிம்.

    மாநில திமுக அமைப்பாளர் சுப்பிரமணியன், முன்னாள் முதல்வர் ஆர்.வி. ஜானகிராமன், தொகுதி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai