சுடச்சுட

  

  விசுவநாதனுக்கு காதுகேளாதோர்வாய்பேசாதோர் சங்கம் ஆதரவு

  By புதுச்சேரி  |   Published on : 08th April 2014 03:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆர்.விசுவநாதனை ஆதரிப்பது என புதுவை காது கேளாதோர் வாய் பேசாதோர் சங்கம் முடிவு செய்துள்ளது.

  புதுச்சேரி காது கேளாதோர் வாய் பேசாதோர் கூட்டுறவு சங்கத்தின் பேரவைக்கூட்டம் அஜீஸ் நகர் ரெட்டியார் பாளையத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் துணைத்தலைவர் மதன் தலைமை வகித்தார். செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். சங்க நிர்வாகிகள் செல்வம், சரவணன் உள்ளிட்ட திரளான மாற்றுத் திறனாளிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். இறுதியாக சங்கத்தின் புதுச்சேரி பிரதேச தலைவர் இரா.சரவணன் நிறைவுரை ஆற்றினார்.

  இக்கூட்டத்தில், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தொடர்ச்சியாக போராடி வரும் இடதுசாரி கட்சிகளின் வேட்பாளர்களை இத்தேர்தலில் ஆதரிப்பது, வெற்றிபெறச் செய்வது. மேலும் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிடும் ஆர்.விசுவநாதனுக்கு வாக்கு சேகரிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai