சுடச்சுட

  

  புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 33 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன; 3 மாற்று வேட்பாளர்கள், 5 சுயேச்சைகள் ஆகிய 8 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

  புதுச்சேரி தொகுதிக்கு மார்ச் 29-ல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. ஆரம்பத்தில் மந்த நிலையில் இருந்த மனு தாக்கல் கடைசி நாளான 5ஆம் தேதி தீவிரமானது. கட்சி வேட்பாளர்களை விட சுயேச்சைகளாக போட்டியிட பலரும் ஆர்வம் காட்டினர். 3 மாற்று வேட்பாளர்கள் உள்பட 41 பேர் சார்பில் மொத்தம் 48 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

  இந்நிலையில், திங்கள்கிழமை காலை மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான தீபக்குமார் முன்னிலையில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.

  8 மனுக்கள் தள்ளுபடி: மாற்று வேட்பாளர்களின் 3 மனுக்கள் மற்றும் போதிய ஆவணங்களை இணைக்காத 5 சுயேச்சைகளின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

  33 மனுக்கள் ஏற்பு: காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி, என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆர்.விசுவநாதன், திமுக வேட்பாளர் நாஜிம், அதிமுக வேட்பாளர் வி.ஓமலிங்கம், ஆம் ஆத்மி வேட்பாளர் ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.) கோ.பழனி மற்றும் சுயேச்சைகள் உள்பட 33 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. புதன்கிழமை (ஏப்ரல் 9) மாலை 5 மணி வரை வேட்புமனுவை வாபஸ் பெறலாம் என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

  33 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதால் கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

  ஒரு இயந்திரத்தில் 16 பெயர்கள் மட்டுமே இடம்பெறும். ஒரு பட்டன் நோட்டாவுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பதால், 2 இயந்திரங்கள் வைத்தால் 31 பெயர்கள் மட்டுமே இடம்பெற முடியும். தற்போது புதுச்சேரி தேர்தல் களத்தில் 33 பேர் உள்ளனர். இதனால் 3 இயந்திரங்கள் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதில் 2 பேர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றால் 2 இயந்திரங்களே போதும். யாரும் வாபஸ் பெறாவிட்டால் தேர்தல் ஆணையம் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்.

  33 வேட்பாளர்கள் விவரம்: 1. ஆர்.கே.அனந்தராமன் (பாமக), 2. ஆர்.ராதாகிருஷ்ணன் (என்.ஆர். காங்கிரஸ்), 3. எம்.வி.ஓமலிங்கம் (அதிமுக), 4. எஸ்.கிருஷ்ணமூர்த்தி (பிஎஸ்பி), 5. வே.நாராயணசாமி (காங்கிரஸ்), 6. ஏ.எம்.எச்.நாஜிம் (திமுக), 7. ஆர்.விசுவநாதன் (சிபிஐ), 8. ச.சித்ர கலா (ஐக்கிய ஜனதாதளம்), 9. ஜி.பழனி (சிபிஐ எம்.எல்.), 10. ம.மரிஉத்திரிநாதன் (சமதா கட்சி), 11. வெ.ரங்கராஜன் (ஆம் ஆத்மி), சுயேச்சைகள்: 12. ப.அசரவேல், 13. எம்.அருமைச்செல்வம், 14. கா.ராமதாஸ், 15. மு.ராமதாஸ், 16. வி. ராமமூர்த்தி, 17. ச.எழிலரசன், 18. கு.கலியமூர்த்தி, 19. எஸ்.சஞ்சீவ் காந்தி, 20. க.சண்முகம், 21. எம்.சிட்டிபாபு, 22. ச.சுதர்சனன், 23. கோ.சுதா, 24. ஐ.செந்தில்குமார், 25. ஜெ.தண்டபாணி, 26. பொன். தனசேகரன், 27. ப.தனராசு, 28. ப.பாக்கியராஜ், 29.

  புவல்லா நாகேஷ்வரராவ், 30. பொம்மாடி துர்கா பிரசாத், 31. கே.மஞ்சினி, 32. ஆர்.வளவன், 33. வி.விஜயா.

  மனு தள்ளுபடி செய்யப்பட்டவர்கள்: மாற்று வேட்பாளர்கள் எம்.பாண்டுரங்கன் (அதிமுக), ஆர்.செந்தில்குமார் (என்.ஆர். காங்கிரஸ்), ஜெயராமன் (பா.ம.க.), சுயேச்சைகள் கெüரிசங்கர், செல்வராஜ், ஜி.முருகன், தங்கதேவதாஸ், பி.ராதாகிருஷ்ணன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai