சுடச்சுட

  

  என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் விவசாயம் கடும் பாதிப்பு: அதிமுக

  By புதுச்சேரி,  |   Published on : 09th April 2014 04:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது என மாநிலச் செயலர் ஆ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

  பாகூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஓமலிங்கத்துக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதிமுக எம்பி விஜிலா சத்தியானந்த் மற்றும் நிர்வாகிகள் தீவிரமாக வாக்குச் சேகரித்தனர்.

  இந்நிகழ்ச்சியில் அன்பழகன் எம்எல்ஏ பேசியதாவது: வரும் தேர்தலில் மக்களை ஏமாற்றும் விதமாக ரங்கசாமியும், நாராயணசாமியும் செயல்பட்டு வருகின்றனர். செய்யாத ஒன்றை செய்ததாக இருவரும் பிரசாரம் செய்து வருகின்றனர்.

  கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் நாடு அழிவுப்பாதையில் சென்று விட்டது.

  அதை சரி செய்ய முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டும். பாகூர் தொகுதி ஆளுங்கட்சி அமைச்சரின் தொகுதியாக உள்ளது. ஆனால் இங்கு பல்வேறு தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

  விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ரங்கசாமி அரசின் தவறான கொள்கைகளால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக்கி விட்டனர்.

  கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தாழ்த்தப்பட்டோருக்கான வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக முதல்வர் கூறியுள்ளார். இது குறித்து அதிமுக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியபோது முதல்வர் மெüனமாக இருந்தார். செயலற்ற நிர்வாகத்தால் அரசு முடங்கி விட்டது.

  மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி மாநில வளர்ச்சிக்கு எதுவுமே செய்யவில்லை.

  இருவரையும் புறக்கணித்து விட்டு மக்கள் அதிமுக வேட்பாளர் ஓமலிங்கத்துக்கு ஆதரவு தர வேண்டும் என்றார்

  அன்பழகன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai