சுடச்சுட

  

  புதுச்சேரியை அடுத்த கூனிச்சம்பட்டு அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ். முகாமின் ஒரு பகுதியாக மூலிகைக் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

  முகாமில் பயனுள்ள மூலிகைச் செடிகள் கண்காட்சி நடத்தப்பட்டது. மேலும் மருத்துவக் குறிப்புகள் விளக்கமும் அளிக்கப்பட்டது. புதுவை சுற்றுச்சூழல் கல்விக் கழகச் செயலர் மோகன்ராஜ் மூலிகைகளின் பயன்கள் குறித்து விவரித்தார்.

  எருக்கம்பூ, பிரண்டை, செம்பருத்தி, கத்தாழை, ஊமந்தை போன்ற செடிகள் பயன்கள், மருத்துவக் குணங்கள் குறித்து எடுத்துரைத்தார். மாணவ, மாணவியரும் தங்கள் பகுதிகளில் இருந்து மூலிகைச் செடிகளை கொண்டு வந்து கண்காட்சியில் வைத்திருந்தனர்.

  மேலும் மின்சார சிக்கனத்தை வலியுறுத்தி ஆண்டுதோறும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமைகளில் இரவு 8 மணி முதல் 9 மணி வரை அனைத்து வீடுகளிலும் விளக்குகள் அணைக்கப்படுவதின் நோக்கம் குறித்து விவரித்தார். இதற்கான ஏற்பாட்டை விரிவுரையாளர் ஜீவராஜ் செய்திருந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai