சுடச்சுட

    

    கல்லூரி மாணவர்களிடம் ஆதரவு திரட்டிய பாமக வேட்பாளர்

    By புதுச்சேரி  |   Published on : 09th April 2014 04:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி பாமக வேட்பாளர் ஆர்.கே.அனந்தராமன் பல்வேறு கல்லூரி மாணவர்களை திங்கள்கிழமை சந்தித்து ஆதரவு கோரினார்.

    இந்நிலையில் புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்வேறு பொறியியல், மருத்துவக் கல்லூரி மாணவர்களை அனந்தராமன் நேரில் சந்தித்துப் பேசினார்.

    அப்போது அவர், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் புதுவையைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவேன்.

    தகவல் தொழில்நுட்பப் பூங்கா, சிறப்பு பொருளாதார மண்டலம் கொண்டு வர பாடுபடுவேன். புதுவைக்கு என தனியாக கல்வி வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் ஜிப்மர், புதுவை பல்கலைக்கழகத்தில் புதுவை மாணவர்களுக்கு அதிக இட ஒதுக்கீடு கிடைக்க முயற்சி மேற்கொள்வேன் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai