சுடச்சுட

  

  காங்கிரஸுக்கு எதிராக தீவிரப் பிரசாரம்:நாம் தமிழர் கட்சி அறிவிப்பு

  By புதுச்சேரி,  |   Published on : 09th April 2014 04:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காங்கிரஸ் கட்சிக்கு எதிராக 18 நாள்கள் தீவிரப் பிரசாரம் செய்வோம் என நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.

  இதுதொடர்பாக புதுவை மாநில தலைவர் மு.முகமது ரபீக் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:

  இலங்கை தமிழர்களின் இன்னல்களுக்கு மத்திய காங்கிரஸ் அரசே காரணம். கடந்த மார்ச் மாதம் ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவு தராமல் இந்தியா புறக்கணித்து விட்டது. இது உலகம் முழுவதும் உள்ள 8 கோடி தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகும்.

  புதுச்சேரிக்கான நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டிலும் காங்கிரஸ் கட்சியினர் ஊழல் புரிந்துள்ளனர். சுனாமி குடியிருப்பு நிதியிலும் முறைகேடு புரிந்துள்ளனர். புதுவையை சிங்கப்பூர் போல் மாற்றுவேன் என நாராயணசாமி கடந்த தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார். மாறாக முதல்வர் ரங்கசாமியுடன் மோதல் காரணமாக புதுவையின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளார்.

  எனவே காங்கிரஸ் கட்சியை வரும் தேர்தலில் தோல்வியுறச் செய்ய தீவிர பிரசாரம் செய்ய நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது. திங்கள்கிழமை முதல் 18 நாள்கள் தொடர்ந்து தீவிர பிரசாரம் செய்ய உளளோம். வரும் 18ஆம் தேதி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதுச்சேரி முழுவதும் தீவிரப் பிரசாரம் செய்கிறார் என்றார்

  முகமது ரபீக்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai