சுடச்சுட

  

  காரைக்கால் கைலாசநாதர் கோவில் தனி அதிகாரி பொறுப்பு மாற்றம்:

  By காரைக்கால்  |   Published on : 09th April 2014 04:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதர் கோவில் தனி அதிகாரி பொறுப்பை, நிர்வாக அதிகாரியிடம் (கோவில்கள்) ஒப்படைத்து, இந்து சமய அறநிலையத் துறை ஆணை பிறப்பித்துள்ளது.

  காரைக்கால் ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோவில் தனி அதிகாரியாக இருந்தவர் கோவி. ஆசைத்தம்பி. இக்கோவிலில் பிரம்மோத்சவ விழா நடைபெற்று வருகிறது. 9-ம் நாள் நிகழ்ச்சியாக வரும் 12-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

  இதையொட்டி, கோவில் நிர்வாகம் வெளியிட்ட பத்திரிகையில் தேர் அமைப்பு ஏ.எம்.எச். நாஜிம், காரைக்கால் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  ஏ.எம்.எச். நாஜிம் தற்போது புதுவை தொகுதி திமுக வேட்பாளராக இருப்பதால், அவருக்கு விளம்பரம் தேடித்தரும் நோக்கில் தனி அதிகாரி கோவி. ஆசைத்தம்பி, நாஜிம் பெயரை பத்திரிகையில் அச்சிட்டுள்ளதாக புதுவை மாநில பாஜக செயலர் எம். அருள்முருகன், என்.ஆர். காங்கிரûஸ சேர்ந்தவரும், காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத் தலைவருமான ஆ. சுரேஷ் அகியோர் காரைக்கால் மாவட்ட கூடுதல் ஆட்சியர் எல். முகமது மன்சூரிடமும், தேர்தல் புகார் தெரிவிக்கும் எண்ணிலும் புகார் அளித்தனர்.

  இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், புதுவை இந்து சமய அறநிலையத் துறை, ஆசைத்தம்பி வகித்துவந்த தனி அதிகாரி பொறுப்பை, நிர்வாக அதிகாரி (கோவில்கள்) ஏ. ராஜராஜன்வீராசாமியிடம் ஒப்படைக்குமாறு செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை ராஜராஜன்வீராசாமி இப்பொறுப்பையும் சேர்த்து வகிக்குமாறு அவருக்கு வந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  இதை நிர்வாக அதிகாரி ஏ. ராஜராஜன்வீராசாமி செவ்வாய்க்கிழமை உறுதி செய்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai