சுடச்சுட

  

  காரைக்கால் கோதண்டராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு

  By காரைக்கால்,  |   Published on : 09th April 2014 04:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காரைக்கால் ஸ்ரீ பார்வதீஸ்வரசுவாமி தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஸ்ரீ கோதண்டராமப் பெருமாள் கோவிலில் ஸ்ரீராம நவமி உற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

  ராமரின் அவதார நாள் ஸ்ரீராம நவமியாகக் கொண்டாடப்படுகிறது. நிகழ்ச்சியையொட்டி, கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. உற்சவர் சீதா, லட்சுமணருடன் கூடிய ராமருக்கு சிறப்பு திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

  சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். வரும் 17-ம் தேதி வரை மாலை வேளையில் பெருமாளுக்கு அலங்கார அர்ச்சனை நடைபெறவுள்ளது. வரும் 18-ம் தேதி சீதாராமர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

  நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி (கோவில்கள்) ஏ. ராஜராஜன் வீராசாமி மற்றும் உபயதாரர்கள் செய்துள்ளனர்.

  இதேபோல, காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் ஸ்ரீராம நவமியையொட்டி, உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, மாலையில் ராமர் கோலத்தில் ஹனுமந்த வாகனத்தில் பெருமாள் புறப்பாடு நடைபெற்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai