சுடச்சுட

  

  காரைக்கால் தெற்குத் தொகுதியில் என்.ஆர். காங்கிரஸார் வாக்குச் சேகரிப்பு

  By காரைக்கால்  |   Published on : 09th April 2014 04:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காரைக்கால் தெற்குத் தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் அந்த கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக வீடுவீடாகச் சென்று திங்கள்கிழமை வாக்குச் சேகரித்தனர்.

  புதுவை தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக ஆர். ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவருக்கு காரைக்காலில் ஆதரவு திரட்டும் வகையில், அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் துணைத் தலைவரும், காரைக்கால் நகரமைப்புக் குழுமத் தலைவருமான கே. கோவிந்தராஜ் தலைமையில், காரைக்கால் தெற்குத் தொகுதியில் வீடு வீடாகச் சென்று அந்த கட்சி நிர்வாகிகள் வாக்குச் சேகரித்தனர்.

  அப்போது கே. கோவிந்தராஜ் கூறியது:

  புதுவை முதல்வர் என். ரங்கசாமி கடந்த 3 ஆண்டுகளில் மத்திய காங்கிரஸ் அரசின் பல்வேறு தடைகளைக் கடந்து மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். மத்திய இணை அமைச்சர் வி. நாராயணசாமி, எந்த திட்டமானாலும் தான் கொண்டுவந்ததாகக் கூறிவருகிறார்.

  இதற்கு முதல்வர் ரங்கசாமி, எல்லா திட்டத்திற்கும் அடித்தளமிட்டது தங்கள் அரசுதான் எனவும், திட்டங்கள் அமலாவதற்கு மாநில அரசின் பங்களிப்பையும் விளக்கியுள்ளார்.

  எனவே, நாராயணசாமியின் பிரசாரங்கள் மக்களிடம் எடுபடாது. அதோடு திமுக, அதிமுக வேட்பாளர்கள் குறித்த சிந்தனையே புதுவை மக்களிடம் இல்லை.

  காரைக்கால் பகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் முதன்மையான வாக்குகளைப் பெறும். இது ரங்கசாமி அரசுக்கு கிடைக்கும் நற்சான்றிதழாகவும், ஊக்கமளிப்பாகவும் அமையும் என்றார் அவர்.

  பிரசாரத்தில் வாரியத் தலைவர் கே.ஆர். உதயக்குமார், ஆ. சுரேஷ், ஆர்.பி. சரவணன், ஓ. கப்பாப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai