சுடச்சுட

  

  புதுச்சேரியில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் குறித்து கணக்கெடுப்புப் பணி முதன்முறையாக நடைபெற்றது.

  புதுச்சேரியில் உள்ள நகராட்சி மற்றும் கொம்யூன் பகுதிகளில் தெரு நாய்கள் குறித்த கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்றன. மொத்தம் 650 சுகாதாரப் பணியாளர்கள் இக்கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். அவரவர் பகுதியில் 2 அல்லது 3 தெருக்களில் இக்கணக்கெடுப்புப் பணி நடைபெற்றது.

  அதிகாலை 6 மணி முதல் 7.30 மணி வரை பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் குறித்த கணக்கெடுப்புப் பணி நடந்தது. இது தொடர்பாக புதுச்சேரி நகராட்சி கால்நடை மருத்துவர் குமரன் கூறியதாவது:

  உச்சநீதிமன்ற உத்தரவின்படி தெரு நாய்கள் பிறப்பைக் கட்டுப்படுத்தும் விதமாக இக்கணக்கெடுப்புப் பணிகள் நடத்தப்பட்டன. வெறி நாய்களை நேரடியாக அடையாளம் காணும் வகையில் அவற்றைப் பிடித்து தடுப்பூசி போடும் நடைமுறை பின்பற்றப்பட்டது. இப்பணியில் ஈடுபட்ட துப்புரவுப் பணியாளர்கள் தங்கள் பகுதி சுகாதார ஆய்வாளர்களிடம் விவர அறிக்கையும் தாக்கல் செய்வர். அனைத்துத் தகவல்களும் சேகரிக்கப்பட்டு ஒருங்கிணைத்து உள்ளாட்சித் துறை இயக்குநரிடம் அளிக்கப்படும்.

  இதன் மூலம் நாய்கள் இனப்பெருக்கத் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த ஏதுவாகும்.

  தற்போது விலங்குகள் பாதுகாப்பு அமைப்பும், நகராட்சி நிர்வாகமும் இனப்பெருக்க தடுப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இனிமேல் இதில் தொண்டு நிறுவனங்களும் ஈடுபடலாம்.

  கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற கணக்கெடுப்பில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதியில் 15 ஆயிரம் நாய்கள் இருந்தது தெரிய வந்தது. தற்போதைய கணக்கெடுப்பின் விவரங்கள் 10-ம் தேதி தெரியவரும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai