சுடச்சுட

  

  நகை அடகுக் கடைக்காரர் கொலை: காரில் வந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை

  By புதுச்சேரி,  |   Published on : 09th April 2014 04:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   புதுவை நகை அடகுக் கடைக்காரர் கொலையில் காரில் வந்த மர்ம நபர்கள் குறித்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  புதுவை ரெயின்போ நகர் விரிவாக்கத்தைச் சேர்ந்தவர் ராதேஷாம்ஜி (45). இவர், புதுவை நெல்லித்தோப்பு அருகே நகை அடகுக் கடை வைத்துள்ளார்.

  கடந்த சனிக்கிழமை காலை, கடைக்கு வந்த மர்ம நபர்கள் சிலர், நகை அடகு வைப்பதைப் போல் கொள்ளையடிக்க முயன்றதாகத் தெரிகிறது. கதவை மூடிய அவர்கள், ராதேஷாம்ஜியை கொலை செய்துவிட்டு, கடையிலிருந்த ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

  புதுவை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ஓம்வீர்சிங், கண்காணிப்பாளர் பிரவீன் திரிபாதி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.

  இதுகுறித்து உருளையன்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  புதுவையில், நகை வியாபாரிகள் தாக்கப்படுவதைக் கண்டித்து நகை வியாபாரிகள் இரண்டு நாள்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும் இது குறித்து இன்ஸ்பெக்டர்கள் வீரவல்லபன், பாஸ்கரன் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  அடகுக் கடையின் அருகே இருந்த சிசிடிவி கேமிராவில் கொலை நடந்தபோது ராதேஷாம்ஜி கடைக்கு அருகே காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் அவரது கடைக்குச் செல்வது பதிவாகியிருந்தது தெரிய வந்துள்ளது.

  அதில் உள்ள அடையாளத்தை வைத்து மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். உள்ளூர் ரௌடிகளிடமும் விசாரித்துள்ளனர். சென்னைப் பகுதியைச் சேர்ந்த நபர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரித்து வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai