சுடச்சுட

  

  நாராயணசாமி வீட்டில் பைப் வெடிகுண்டு வழக்கு: குற்றம் சாட்டப்பட்டோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

  By புதுச்சேரி  |   Published on : 09th April 2014 04:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மத்திய அமைச்சர் நாராயணசாமி வீட்டில் பைப் வெடிகுண்டு வைத்த வழக்குத் தொடர்பாக மதுரையில் கைது செய்யப்பட்ட 4 பேர் புதன்கிழமை புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர். செவ்வாய்க்கிழமை புதுச்சேரி சிறையில் வைக்க அனுமதி கிடைக்காததால் கடலூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

  புதுச்சேரி எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள நாராயணசாமி வீட்டின் முன்பு காருக்கு அடியில் ஜனவரி 29-ம் தேதி பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது.

  பின்னர் போலீஸார் அதை கைப்பற்றி செயலிழக்கச் செய்தனர்.

  இவ்வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.)வுக்கு மாற்றப்பட்டது.

  இதேபோல் மதுரையிலும் வணிக வளாகம் பகுதியில் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மதுரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

  குண்டுவைப்புச் சம்பவம் தொடர்பாக திருச்செல்வம், தங்கராஜ், கவியரசன்,காளைலிங்கம் மற்றம் மார்ட்டின் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள், மதுரை மற்றும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

  இந்நிலையில் மத்திய அமைச்சர் நாராயணசாமி வீட்டில் குண்டு வைத்தது தொடர்பான வழக்கை விசாரிப்பதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்களில் 4 பேர் மட்டும் மதுரை ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் ரத்தினம், எஸ்.ஐ. குபேந்திரன் தலைமையிலான போலீஸ் படை பாதுகாப்பில் செவ்வாய்க்கிழமை இரவு அழைத்து வரப்பட்டனர். நீதிமன்ற பணி நேரம் முடிவடைந்த பின்னர் அவர்கள் அழைத்து வரப்பட்டனர். புதன்கிழமை ஆஜர் செய்ய வேண்டியிருப்பதால் புதுவை மத்திய சிறையில் அவர்களை இரவு தங்க வைக்க வேண்டும் என போலீஸார் கோரினர். ஆனால் வேறு மாநிலத்தைச் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்டோர் புதுவையில் சிறையில் இதுவரை தங்க வைக்கப்பட்டதில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

  இதையடுத்து 4 பேரையும் போலீஸார் கடலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

  அனைவரும் புதன்கிழமை காலை புதுவை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தனர். இவர்கள் என்ஐஏ வசம் ஒப்படைக்கப்படுவார்கள் எனக் கருதப்படுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai