சுடச்சுட

    

    பழங்குடியினர் சங்கம் நோட்டாவுக்கு வாக்களிக்க முடிவு

    By புதுச்சேரி  |   Published on : 09th April 2014 04:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் பழங்குடியின மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்காததைக் கண்டித்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நோட்டாவில் வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக நெட்டப்பாக்கம் கொம்யூன் பழங்குடியினர் நலச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக அதன் தலைவர் ஜி.சங்கர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுவை, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியினர் வசித்து வருகின்றனர். ஆனால் பழங்குடியின மக்கள் எவருக்கும் எஸ்.டி. சான்றிதழ் தரப்படவில்லை.

    கடந்த 40 ஆண்டு காலமாக பலமுறை போராட்டங்கள் நடத்தியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்களிடம் மனுக்கள் அளித்தும் பயனில்லை. பழங்குடியினத்தவருக்கு ஜாதி சான்றிதழ் தரப்படவில்லை. மாநில அரசு அதிகாரிகளும் மனுவை வாங்கிக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர்.

    ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் சமயத்தில் கூட எந்த அரசியல் கட்சியும் பழங்குடியின மக்களை எஸ்.டி. பிரிவில் சேர்ப்பதாக அறிவிக்கவில்லை.

    இதனால் புதுவையில் வாழும் 20 ஆயிரம் பழங்குடியினத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் எதுவும் செய்யாத காரணத்தால் புதுவையில் உள்ள பழங்குடியின மக்கள் அனைவரும் வரும் தேர்தலில் நோட்டாவில் வாக்களிக்க முடிவு செய்துள்ளோம் என்றார் சங்கர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai