சுடச்சுட

    

    புதுச்சேரி ஆட்டோ தொழிலாளர்கள் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவு

    By புதுச்சேரி,  |   Published on : 09th April 2014 04:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி ஆட்டோ தொழிலாளர்கள் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆர்.விசுவநாதனுக்கு ஆதரவு தர தீர்மானித்துள்ளனர்.

    சிஐடியூ, ஏஐடியூசி ஆட்டோ தொழிற்சங்கங்களின் பேரவைக் கூட்டம் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இப்பேரவை கூட்டத்துக்கு சேதுசெல்வம் தலைமை வகித்தார். சீனிவாசன் முன்னிலை வகித்தார். சிஐடியூ பிரதேச செயலர் நிலவழகன், ஆட்டோ சங்க கௌரவத் தலைவர் தா.முருகன், தலைவர் ராஜாங்கம், ஏஐடியூசி நிர்வாகிகள் நாரா.கலைநாதன், வி.எஸ். அபிஷேகம், சங்க நிர்வாகிகள் மது, நூர்முகமது, மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் சுதா சுந்தர்ராமன் பேசியதாவது: மாற்றுக் கொள்கையை முன்னிறுத்தி மக்களைச் சந்தித்து வரும் இடதுசாரி கட்சியின் வேட்பாளர் ஆர்.விசுவநாதனுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார். வேட்பாளர் விசுவநாதன் வெற்றிக்கு ஆட்டோ தொழிலாளர்கள் பாடுபட வேண்டும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai