சுடச்சுட

  

  "புதுவையில் காங்கிரஸின் வெற்றி பிரகாசமாக உள்ளது

  By 'காரைக்கால்  |   Published on : 09th April 2014 04:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையில் காங்கிரஸின் வெற்றி பிரகாசமாக உள்ளதாகத் தெரிவித்தார் சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.என். திருமுருகன்.

  காரைக்கால் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் புதுவை காங்கிரஸ் பொதுச் செயலரும், பேரவை உறுப்பினருமான பி.ஆர்.என். திருமுருகன் செவ்வாய்க்கிழமை வீடுவீடாகச் சென்று புதுவை காங்கிரஸ் வேட்பாளர் வி. நாராயணசாமிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியது:

  காரைக்கால் மக்கள் தரமான மருத்துவ வசதியை பெறமுடியவில்லை. புதுச்சேரி பிராந்தியத்தில் ஜிப்மர் மற்றும் பல்வேறு சிறப்பு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் உள்ளன.

  காரைக்கால் மக்கள் பயன்பெறும் வகையில் ராஜீவ் காந்தி மருத்துவக் காப்பீடுத் திட்டம் கொண்டுவரப்பட்டு, அறுவைச் சிகிச்சை முதல் பல்வேறு சிகிச்சையை மக்கள் தனியார் மருத்துவமனையில் செய்துவந்தனர்.

  ஆனால், புதுச்சேரி அரசு கடந்த 2013, டிசம்பர் மாதத்துடன் இந்தத் திட்டத்தை ரத்துசெய்துவிட்டது.

  காரைக்காலை சேர்ந்தோர் விபத்தினாலோ அல்லது கூடுதல் சிகிச்சை பெறவோ காரைக்கால் மருத்துவமனையில் தடையில்லா சான்று பெற்று தனியார் மருத்துவமனைக்கு செல்லலாம் என அரசு கூறுகிறது. இதற்கான முறையான வழிமுறைகளும் வகுக்கப்படவில்லை. இதனால், காரைக்கால் மாவட்டத்தின் ஒட்டுமொத்த மக்களும் ரங்கசாமிக்கு எதிராக உள்ளனர்.

  வைத்திலிங்கம் தலைமையில் நடந்த அரசின்போது மின் கட்டணம் நுகர்வோரை பாதிக்காத வகையில் நிர்ணயம் செய்து வசூலிக்கப்பட்டது. ரங்கசாமி ஆட்சியில் மின் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண மக்களை வெகுவாக பாதிக்கும் வகையில் ரங்கசாமியின் செயல்பாடு உள்ளது. இதனால், அவர் யாருடன் கூட்டணி அமைத்தாலும் பயனேதும் இல்லை என்றார் திரு

  முருகன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai