Enable Javscript for better performance
முயல் வேட்டை: துப்பாக்கி வெடித்ததில் இளைஞர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    முயல் வேட்டை: துப்பாக்கி வெடித்ததில் இளைஞர் காயம்

    By புதுச்சேரி,  |   Published on : 09th April 2014 04:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை அருகே முயல் வேட்டைக்குச் சென்றபோது நாட்டுத் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயமடைந்தார். இது தொடர்பாக வேட்டைக்குச் சென்ற 5 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

    புதுவை அருகே உள்ள பாகூர் அடுத்த சோரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் சிவக்குமார் (30). கொத்தனார்.

    இவர், அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்களான தமிழன்பன் (23), நாராயணன் (35), பாண்டித்துரை (23), சீதா (26) ஆகியோருடன், திங்கள்கிழமை இரவு அருகே உள்ள கடலூர் மாவட்டம், நத்தமேடு தென்பெண்ணை ஆற்றுப் பகுதிக்கு நாட்டுத் துப்பாக்கியுடன் சென்றார். இவர்கள் காட்டுப்பூனை, முயல் ஆகியவற்றை வேட்டையாடச் சென்றதாகத் தெரிகிறது.

    அப்போது, இவர்கள் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி எதிர்பாராத விதமாக வெடித்துள்ளது.

    இதில், சிவக்குமாரின் கால்களில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து பலத்த காயமடைந்துள்ளார்.

    உடனே அவரை புதுவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து தகவலறிந்த பாகூர் போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று நாட்டுத் துப்பாக்கியைப் பறிமுதல் செய்து, சிவக்குமார் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai